தென்காசி மாவட்டத்தில் இருக்கும் முக்கிய ஹிந்து வழிபாடு புண்ணியஸ்தல கோவிகள்( Hindu Temples in Tenkasi ).

தென்காசி என்பது தென் இந்தியாவில் இருக்கும் காசி ஆகும், இங்கு பல்வேறு மிகவும் சக்திவாய்ந்த கோவில்கள் உள்ளன, நிச்சயம் தென்காசி வருபவர்கள் இந்த கோவில்களை வழிபடுவது மிகவும் நன்று.

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் – தென்காசி

தென்காசிக்கு அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்குகோவில் ஒரு அடையாளம் ஆகும், இந்தக்கோவில் தென்காசி பாண்டியாஸ் என்று அழைக்கப்படும் பாண்டிய மன்னரால் 1446 ஆம் ஆண்டு இத்திருக்கோவில் கட்டப்பட்டது.

அடி கோபுரம் மற்றும் 11 கால் மண்டபம் என்று கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோவில் – குற்றாலம்

சங்ககால இலகியங்களில் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர்மற்றும் அருணகிரிநாதர் புகழ்பாடிய திருக்கோயிலாகும்.

இத்திருத்தலம் வைணவ திருத்தலமாக இருந்து, சைவத் திருத்தலமாக அகத்திய முனிவரால் மாற்றப்பட்டது.

நடராஜப்பெருமான் நடனமாடிய ஐந்து சபைகளுள் சித்திர சபை அமைந்துள்ள திருத்தலம் ஆகும்.

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவில் – பண்பொழி

இயற்க்கை எழில் மிகுந்த மேற்கு தொடர்ச்சி மழையின் அருகில் மிக உயரமான குன்றின் மீது அமைந்துள்ள கோவில்.
அருணகிரிநாதரால் புகழ்பாடப்பட்ட கோவில்.

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் – சங்கரன்கோவில்

சைவ மற்றும் வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விதமாக எம்பெருமான் சிவனும் மற்றும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சிதரும் புண்ணிய தலம் இத்திருக்கோவில்.
ஆடி மாதத்தில் ஆடித்தபசு லட்சக்கணக்கான பக்தர்களால் கொண்டாடப்படும்.

Hindu Temples in Tenkasi , Tenkasi Hindu Kovil, Tenkasi Kovilkal